கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம்: அம்பலப்படுத்திய வுஹான் ஆராய்ச்சியாளர்
சீனா திட்டமிட்டே கொரோனா வைரஸை உயிரியல் ஆயுதமாக வடிவமைத்துள்ளது என்று வுஹானில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதம்
திகைக்கவைக்கும் அந்த தகவலை வுஹான் ஆராய்ச்சியாளர் சாவோ ஷான் சர்வதேச செய்தி ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார். சாவோ ஷான் மற்றும் அவரது சகாக்களுக்கு, மனிதர்கள் உட்பட உயிரினங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள மாதிரி ஒன்றை அடையாளம் காண வுஹான் நிர்வாகம் பணித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
You must spread this like mad.
— Inconvenient Truths by Jennifer Zeng 曾錚真言 (@jenniferzeng97) June 27, 2023
First-ever explosive admission from #ShaoChao (单超 ) #WIV (#WuhanInstituteofVirology) researcher, vice director of #Wuhan #P4Lab: I Was Given 4 Strains of #Coronavirus to Select the Most Infectious one in Feb 2019. They were artificial, engineered… pic.twitter.com/pNNPugwwli
இதனையடுத்து, ஆபத்தான 4 கிருமிகளை அடையாளம் கண்டு, அதை தமது உயர் அதிகாரிகளுக்கு 2019ல் ஒப்படைத்ததாகவும் சாவோ ஷான் குறிப்பிட்டுள்ளார். அந்த கிருமிகளை மனிதரிடத்திலும், வெளவால்கள் மற்றும் குரங்குகளிடத்திலும் சோதனை செய்துள்ளதாக சாவோ ஷான் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் என்பது உண்மையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள உயிரியல் ஆயுதம் என குறிப்பிட்டுள்ள சாவோ ஷான், 2019ல் வுஹான் நகரில் முன்னெடுக்கப்பட்ட ராணுவ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது தமது சகாக்கள் பலர் மாயமானதாகவும்,
7 மில்லியன் மக்கள் சாவு
அதில் ஒருவர் பின்னர் தெரிவிக்கையில், சர்வதேச வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டல்களில் தங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த ஹொட்டல்களில் ஆரோக்கியம் அல்லது சுகாதார நிலைமைகளை சரிபார்க்க சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
உண்மையில், உயிரியல் ஆய்வாளர்களை அப்படியான ஒரு ஆய்வுக்கு ஒருபோதும் அனுப்ப மாட்டார்கள் எனவும், அந்த ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் பரப்பும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சாவோ ஷான் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஆனால், உலகமெங்கும் சுமார் 7 மில்லியன் மக்கள் சாவுக்கு காரணமாக கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை உறுதியான பின்னணித் தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |