போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா! இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என மக்ரோன் மறுப்பு
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்தடங்களை திறக்க ஒப்புக்கொண்ட ரஷ்யா, மக்களை வெளியேற்றும் பாதைகளில் பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளது.
உக்ரைனில் 2 முறை தற்காலிக போர்நிறுத்தம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 3வது முறையாக மக்களை வெளியேற்ற போர்நிறுத்தத்திற்கு ரஷ்ய ஒப்புக்கொண்டது.
கீவ், கார்கிவ், Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்கள் உட்பட பல உக்ரேனிய நகரங்களில் மனிதாபினமான வழித்தடங்களை திறந்து மற்றும் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ரஷ்யா இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மக்களை வெளியேற்ற ரஷ்யா ஒப்புக்கொண்ட பாதைகளை அந்நாட்டின் RIA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், சில பாதைகள் ரஷ்யா மற்றும் பெலாரஸை நோக்கி செல்வதை காட்டுகிறது.
கீவில் இருந்து திறக்கப்பட்டுள்ள வழித்தடம் ரஷ்யாவின் நட்பு நாடான பொலரஸை நோக்கி செல்கிறது, கார்கிவ் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற திறக்கப்பட்டுள்ள பாதை ரஷ்யாவை நோக்கி செல்கிறது.
Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்களிலிருந்து வெளியேற திறக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வேறொரு உக்ரேனின நகரங்களுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் செல்கிறது.
இந்நிலையில், இதற்கும் தனக்கும் சம்மந்திமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மறுத்துள்ளார். ரஷ்யாவுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்க மக்ரோன் கோரிக்கை விடுக்கவில்லை என ஜனாதிபதி அலுவகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் வெளியேறுவதற்கு மற்றும் உதவி பொருட்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு புடினிடம் மக்ரோன் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.