பிரித்தானியாவில் 40 ஆண்டுகள் இல்லாத பணவீக்கம்: உச்சத்தை தொடும் வாழ்க்கை செலவு நெருக்கடி
பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் பணவீக்கமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9 சதவிகிதம் வரை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கத்தால் பெரும்பாலான பொதுமக்கள் பயங்கரமான வாழ்க்கை செலவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர், இத்துடன் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான மக்கள் தங்களது தினசரி வாழ்நாளில் குறைவான உணவையோ அல்லது உணவை தவிர்க்கவோ செய்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பிரித்தானியாவின் கடந்த மாத பணவீக்கம் 9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது, இது 1982ம் ஆண்டிற்கு பிறகான ஓப்பிட்டு அளவீடுகளின் அதிகபட்ச நிலையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட தரவில், அன்றாடப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான அடிப்படையிலான விலை உயர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்று-காலாண்டு உயர்வு, ஏரிசக்தி விலையின் கணிக்கமுடியாத 54 சதவிகித அதிகரிப்பு காரணமாக இந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான உச்சவரம்பு பொருள்களின் உயர்வுகான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போரினால் உடனடியாக உயர்ந்த பணவீக்கம், தலைப்பு நுகர்வோர் விலைக் குறியீடுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் 7 சதவிகிதமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரித்தானிய வங்கி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பிரித்தானியாவின் பணவீக்கம் 10 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது. அத்துடன், இந்த பணவீக்க அழுத்தமானது, பிரித்தானிய பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்துவதுடன் வேலையின்மையும் அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருந்தது.
கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் இளைஞர்: அதிர்ஷ்டவசமாக தப்பி வந்த ஆச்சரிய சம்பவம்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு அரசு தொடர்ந்து சில முக்கிய சலுகைகளை தொடர்ந்து வழங்கும் இருப்பினும் இதனை அரசாங்கத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.