ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் இளைஞர்: அதிர்ஷ்டவசமாக தப்பி வந்த ஆச்சரிய சம்பவம்
ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர் ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதைக் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் 18ஆம் திகதி, உக்ரைனின் Dovzhyk கிராமத்திலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
அந்த வீட்டில், Mykola Kulichenko, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் Iryna என்னும் அவரது சகோதரி ஆகியோர் வாழ்ந்துவந்துள்ளார்கள். அந்த ரஷ்யப் படையினர் வரும்போது நல்ல வேளையாக Iryna வீட்டில் இல்லை.
அந்த பகுதியில் ரஷ்யப் படைவீரர்களின் இராணுவ தளவாடங்கள் மீது யாரோ குண்டு வீசியதால், குண்டு வீசியவரைத் தேடிக்கொண்டிருந்த ரஷ்யப் படையினர் Mykola வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.
அப்போது, Mykolaவின் தாத்தாவுக்குச் சொந்தமான இராணுவ பதக்கம் ஒன்று கிடைக்க, Mykola மற்றும் அவரது சகோதர்கள் ஆகிய மூவரையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள் ரஷ்யப் படையினர்.
ஒரு கட்டிடத்தில் அடித்தளத்தில் அடைத்து வைத்து, மூன்று நாட்கள் சித்திரவதைக்குப் பிறகு நான்காவது நாள் அவர்களை வெளியே கொண்டு வந்து, அவர்கள் கண்களைக் கட்டி முழங்காலில் விட்டு துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கியால் சுட்டதில் Mykolaவின் சகோதரர்கள் இருவரும் உயிரிழக்க, Mykolaவின் கன்னத்தில் குண்டு பாய்ந்து வெளியேற, அவர் உயிர் தப்பியிருக்கிறார்.
ஆனாலும், தான் இறந்ததுபோல் அவர் மூச்சை அடக்கிக்கொண்டு கிடக்க, சகோதரர்கள் மூவரையும் தூக்கி ஒரு பள்ளத்தில் வீசி, மேலே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்த ரஷ்யப் படைவீரர்கள்.
பிறகு மெதுவாக தன்னைச் சூழ்ந்திருந்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வெளியே வந்திருக்கிறார் Mykola. அவர் காயத்துடன் வீடு வந்து சேர, வீட்டில் தங்கை Iryna அண்ணன்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்திருக்கிறார்.
Mykolaவைக் கண்டதும் மகிழ்ந்து, அண்ணன்கள் இருவரும் எங்கே என்று கேட்க, அவர் நடந்ததைச் சொல்ல, கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார் Iryna. பிறகு தங்கள் சகோதர்களுக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்திருக்கிறார்கள் அண்ணனும் தங்கையும்.
தற்போது, தான் உயிர் பிழைத்த ஆச்சரியக் கதையை உலகம் அறிவதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.
ரஷ்யாவால் கொல்ல முடியாத அந்த உக்ரைனியரின் கதையை இங்கு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.