கத்தார் உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்த வீரர்! ஜப்பானை விளாசிய கோஸ்டா ரிகா
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
கார்னர் வாய்ப்புகளை தவறவிட்ட ஜப்பான்
அகமது பின் அலி மைதானத்தில் நடந்த போட்டியில் ஜப்பான் மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஜப்பான் அணி தனக்கு கிடைத்தை கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் பியூலர் அசத்தலாக கோல் அடித்தார்.
@Francisco Seco/AP
ஜப்பான் அணி பதில் கோல் அடிக்காததால், கீஷெர் பியூலர் அடித்த கோல் கோஸ்டா ரிகாவின் வெற்றிக்கான கோலாக மாறியது. சாம்பியன் அணியான ஜேர்மனியை தனது முதல் போட்டியில் வீழ்த்திய ஜப்பான், சிறிய அணியான கோஸ்டா ரிகாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.
@REUTERS/Carl Recine
ஜப்பானின் 5 கார்னர் கிக் வாய்ப்புகள் கோஸ்டா ரிகாவினால் முறியடிக்கப்பட்டது. அதே சமயம் கோஸ்டா ரிகாவுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு ,கூட கிடைக்கவில்லை.
@AP Photo/Ariel Schalit
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின், ஜப்பான் அணிகளுடன் கார்னர் கோஸ்டா ரிகாவும் 3 புள்ளிகளை பெற்று தங்கள் பிரிவில் சம நிலையில் உள்ளது.
கோஸ்டா ரிகா அணியின் பியூலருக்கு இது முதல் உலகக்கோப்பை கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP/ADRIAN DENNIS