கவுன்சில் வரியால் வீடுகளை விற்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்: வேல்ஸ் உரிமையாளர்கள்
கவுன்சில் வரி விதிப்பால் தங்களது விடுமுறை வீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, இரண்டாவது வீடு வைத்திருக்கும் பிரித்தானிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதிய கவுன்சில் வரி விதிப்பு
பிரித்தானியாவில் கவுன்சில் வரியை 300 சதவீதம் வரை உயர்த்த அனுமதிக்கும் விதிகளின் காரணமாக, வேல்ஸில் உள்ள அழகான இடங்களில் இரண்டாவது வீடுகள் (Holiday Homes) வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவற்றை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு இரண்டாவது வீடு மற்றும் விடுமுறை நாட்கள் மீதான தொடர்பில் கவுன்சில் வரி விதி குறித்து அறிவிக்கப்பட்டது
தங்கள் இரண்டாவது வீட்டை விடுமுறையை கழிக்க வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கவுன்சில் வரிக்கு பதிலாக மலிவான வணிக கட்டணத்தை செலுத்தலாம். ஆனால் இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்வதற்கான வரம்பு ஆறு மாதங்களில் 70 இரவுகளில் இருந்து 182 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் நீண்ட கால மோசமான வானிலையால் ஏற்கனவே வாடகையை இழந்த பிறகு, பெரும் வரி சட்டத்தில் சிக்கி இருப்பதை காணலாம் என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உரிமையாளரின் கூற்று
ஓய்வுபெற்ற மின் பொறியாளர் இயன் கிடில் விதி மாற்றங்கள் தன்னை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து கூறுகையில், 'புதிய விதியின் மூலம் வருடத்திற்கு 182 நாட்கள் வாடகைக்கு விட வேண்டும். அது வருடத்தில் ஆறு மாதங்கள் மற்றும் கோடை காலத்தில் மட்டுமே அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பது கடினம். 25 சதவீத விலை குறைப்பு இருந்தபோதிலும், இந்த ஆண்டு 182 நாட்கள் இலக்கை எட்டுவது கடினமாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
கிடில் மேலும் கூறும்போது, இனியும் விலையைக் குறைத்தால், தோட்டக்காரர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உட்பட சொத்தைப் பராமரிக்கும் செலவுகளைக் கூட அவர்களால் ஈடுகட்ட முடியாது என்றார்.
அத்துடன், குறைவான பிரித்தானியர்கள் வாழ்க்கை செலவு நெருக்கடியால் விடுமுறை எடுப்பார்கள் என்பதால், இந்த ஆண்டு 182 நாட்கள் இலக்கை எட்டுவது கடினமாக உள்ளது எனவும், இதன் காரணமாக தங்கள் ஹாலிடே வீடுகளை விற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கிடில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |