த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் - மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதம்
மாநகராட்சி கூட்டத்தில் த்ரிஷாவின் படத்தையும் வைக்க வேண்டும் என கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று பொறுப்பு மேயர் குணசேகரன், ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட எந்த பணியும் நடைபெறவில்லை என்று திமுக, காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே கூச்சலிட்டனர்.

அதிமுகவின் 27வது நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ், தான் அளித்த எந்த மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி பொறுப்பு மேயர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து, அரங்கில் முதலமைச்சர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்த நிலையில் முன்னாள் முதல்வர்கள் படங்களையும் மாட்ட வேண்டும் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது 11-வது வார்டு சுயேட்சை கவுன்சிலரான சி. மெய்யர் என்பவர், வருங்கால முதலமைச்சர் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும்” என கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
'அடுத்த முதல்வர் திரிஷா படத்தை வைங்க'
— Spark+ (@SparkPluz_) June 24, 2026
ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவர்தான் - காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல் pic.twitter.com/7JXwOIQzRH
மேலும், "த்ரிஷா படத்தை மன்றத்துக்குள்ள வெச்சே ஆகனும். த்ரிஷா படத்தை வைக்கலைன்னா பெரிய கலவரம் நடக்கும். ஆட்சி மாற்றத்துக்கு காரணமே திரிஷாதான்.
அடுத்த முதல்வரே த்ரிஷாதான். த்ரிஷா படத்தை வெச்சுட்டு கூட்டத்தை நடத்துங்க.. த்ரிஷா என்ன மட்டமா? த்ரிஷா படத்தை வையுங்க" என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |