புலம்பெயர்வோரைக் கவர கனடாவுக்குப் போட்டியாக களமிறங்கும் நாடுகள்
பெருந்தொற்றுக் காலகட்டத்திற்குப் பிறகு பல நாடுகள் திறமையுள்ள புலம்பெயர்வோரைக் கவரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இதனால், புலம்பெயர்தலுக்கு எளிமையான நடைமுறைகளைக் கொண்ட நாடு என பெயர் பெற்ற கனடாவுக்கு கடுமையான போட்டி உருவாகியுள்ளது எனலாம்.
ஆம், கோவிட் தொற்று காலகட்டத்தைற்குப் பின் பல விடயங்கள் மாறி வருகின்றன என்று கூறும் Leverage Edu என்னும் அமைப்பின் நிறுவனரான அக்ஷய் சதுர்வேதி, இப்போது கனடாவுக்கு கடும் போட்டியாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் களமிறங்கியுள்ளன என்கிறார்.
நல்ல வருவாய் தரும் வேலைவாய்ப்புகள், குடியுரிமை பெறுவதற்கான சிறந்த வழிமுறை ஆகியவை மேலும் அதிக மக்களை இந்த நாடுகளை நோக்கி ஈர்க்கின்றன என்கிறார் அவர்.
2021இல், தகுதியுடைய பட்டதாரிகள், பிரித்தானியாவில் படிப்பை முடித்த பின்னரும் மூன்று ஆண்டுகளுக்கு பிரித்தானியாவிலேயே தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அத்துடன், பிரித்தானியா இந்த மாதத்தில் மிகு திறன் தனிநபர் விசா (High Potential Individual - HPI) ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விசாவின் நோக்கம் அதி திறன் கொண்ட வெளிநாட்டு பல்கலை மாணவர்களை ஈர்ப்பதாகும். அவர்கள் தங்கள் பட்டப்படிப்புக்கு ஏற்ப, பிரித்தானியாவில் தங்கவும், பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பணி செய்வோருக்கு பிரித்தானிய பணி அழைப்போ, ஸ்பான்சரோ அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த விசா வைத்திருப்போர் தடையின்றி பிரித்தானியாவுக்கு வந்து பணி செய்யலாம், சுய தொழில் செய்யலாம், மேலும் தன்னார்வலராகவும் பணியாற்றலாம்.
இந்நிலையில், பிரித்தானியாவைப் போலவே, அவுஸ்திரேலியாவும் பட்டம் பெறும் மாணவர்களுக்கான ஒரு flexible பணி விசாவை வழங்குகிறது. சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் வரையும், முனைவர் பட்டம் பெறுவதற்காக படிப்பவர்கள் நான்கு ஆண்டுகள் வரையும் அந்த நகரங்களில் தங்கி அங்கு பணி செய்யலாம்.
Adelaide, Perth மற்றும் Canberra ஆகிய நகரங்களில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடம் மற்றும் தாங்கள் தங்கியிருக்கும் நகரம் ஆகியவற்றின் அடிப்படையில் 2 ஆண்டுகள் வரை கூடுதலாக தங்கள் பணி விசாவை நீட்டிப்புச் செய்துகொள்ளலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022