ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா உடன் சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள்
ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகளை பார்க்கலாம்.
இந்திய சுதந்திர தினம்
வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது.
அன்று டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.
200 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானிய ஆட்சியில் இருந்த இந்தியா விடுதலை பெற்ற தினத்தை, நாடு முழுவதும் இந்தியர்கள் கொடியேற்றி கொண்டாடுவார்கள்.
அதே போல், ஆகஸ்ட் 15 ஆம் திகதி வேறு 5 நாடுகளும் தங்களது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.
காங்கோ குடியரசு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு, 15 ஆகஸ்ட் 1960 அன்று பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
அந்த நாளில், காங்கோ தலைநகர் ப்ரஸ்ஸாவில் அணிவகுப்பு உள்ளிட்ட சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும்.
பஹ்ரைன்
வளைகுடா நாடான பஹ்ரைன், 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.
ஆனால், அங்கு சுதந்திர தினத்திற்கு எந்த கொண்டாட்டங்களோ, பொது விடுமுறையோ கிடையாது.
மாறாக, மறைந்த மன்னர் இசா பின் சல்மான் அல் கலீஃபா அரியணை ஏறிய டிசம்பர் 16 ஆம் திகதியை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.
தென் கொரியா
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வீழ்ந்ததையடுத்து, அதன் ஆளுகையில் இருந்த கொரியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு பிறகு, வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு நாடுகளும் தனித்தனியாக பிரிந்தன.
இருந்தபோதிலும், ஆகஸ்ட் 15 ஆம் திகதியையே சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.
வட கொரியா
35 ஆண்டுகளாக ஜப்பானின் ஆளுகையில் இருந்த கொரியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் திகதியை வடகொரியா சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.
அன்றைய தினத்தில், வடகொரியா தலைநகரில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
லீக்கின்ஸ்டைன்
ஐரோப்பிய நாடான லீக்கின்ஸ்டைனும், ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடுகிறது.
ஆனால், இது மற்ற நாடுகளை போல், இன்னொரு நாட்டின் ஆளுகையின் கீழ் இருந்து விடுதலை பெற்றதற்காக அந்த திகதியை தேர்வு செய்யவில்லை.
அந்த நாளில் அதன் இளவரசர் இரண்டாம் ஜோசப்பின் பிறந்த நாள் வருவதால், அந்த தினத்தை தேசிய நாளாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |