உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்யாவால் கொல்லப்பட்டால்... அவர் இடத்தில் அடுத்து! வெளியான முக்கிய தகவல்
உக்ரைன் ஜனாதிபதியுடன் நட்புறவு கொண்ட நாடுகள் ஒரு முக்கிய விடயம் குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா நாள்கணக்கில் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தாலும் அடங்க மறுக்கும் புடின் அரசு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டில் இருந்து தப்பி செல்லாமல் தொடர்ந்து அங்கேயே தான் இருக்கிறார் என அந்நாட்டு அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜெலன்ஸ்கி தொடர்பில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் நட்புறவு கொண்ட நாடுகள், அவர் ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ அவருக்கு அடுத்த succession (ஜனாதிபதியின் இடத்திற்கு வேறு நபர்) குறித்து விவாதித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.