உலகில் அதிகளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்துள்ள நாடுகள் எது தெரியுமா?
தங்கம் என்பது ஆபரணம் என்பதை தாண்டி ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
தனிநபர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பொருளாதர வீழ்ச்சியின் போது தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. தங்கத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
சமீபகாலமாக தங்கத்தை போல் வெள்ளியின் மதிப்பு உயர தொடங்கியுள்ளது.
அதிக தங்கம் வைத்துள்ள நாடு
இந்நிலையில், உலகில் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளியை இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
அதிகளவு தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.
ரஷ்யா கடந்த ஆண்டில் மட்டும் 310 மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளது.
அவுஸ்திரேலியா சுமார் 12,000 மெட்ரிக் டன் அளவிற்கு இருப்பு வைத்துள்ளது. இதன் ஆண்டு உற்பத்தி, 320 - 330 மெட்ரிக் டன் அளவில் உள்ளது.
இதில் 3,200 மெட்ரிக் டன் தங்க இருப்புடன் கனடா 3வது இடத்திலும், 3,100 மெட்ரிக் டன் உடன் சீனா 4வது இடத்திலும், 3000 மெட்ரிக் உடன் அமெரிக்கா 5வது இடத்திலும் உள்ளது.
வெள்ளியில் முதலிடமுள்ள நாடு
இதே போல், அதிகளவில் வெள்ளி இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் பெரு முதலிடம் உள்ளது.
பெரு 1,40,000 மெட்ரிக் டன் வெள்ளி இருப்புடன் முதலிடத்தில் உள்ளது. பெருவில் உள்ள அண்டமினா சுரங்கம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வெள்ளியை ஏற்றுமதி செய்கிறது.
இந்த பட்டியலில், 92,000 மெட்ரிக் டன் வெள்ளி இருப்புடன் ரஷ்யா 2வது இடத்தில் உள்ளது.
70,000 மெட்ரிக் டன் வெள்ளியுடன் சீனா 3வது இடத்திலும், 61,000 மெட்ரிக் டன் வெள்ளியுடன் போலந்து 4வது இடத்திலும், 37,000 மெட்ரிக் டன் வெள்ளியுடன் மெக்சிகோ 5வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |