அமெரிக்காவிற்கு பயணம்... நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பல்வேறு நாடுகள்
பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
கடும் நடவடிக்கை
ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் தங்கள் கொள்கைகளை மாற்றியுள்ளதால், அங்கு பயணிக்கும் வெளிநாட்டவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, எல்லைக் கொள்கையை வலுப்படுத்தும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
மட்டுமின்றி விசா சரிபார்ப்பு செயல்முறையை கடுமையாக்கியதுடன் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.
விதிகள் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் நுழைவு மறுக்கப்பட்டது அல்லது தடுக்கப்பட்டனர். கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாஸ்மின் மூனி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் பல்வேறு தடுப்பு மையங்களில் கழிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் விசாவிற்கு விண்ணப்பித்த பின்னர் மூனி கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து தனக்கு விளக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
மட்டுமின்றி, மார்ச் 9 ம் திகதி அமெரிக்க எல்லை அதிகாரிகள் பிரெஞ்சு விண்வெளி விஞ்ஞானி ஒருவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டில் தங்கியிருந்ததைத் தடுத்து, அவரை நாடு கடத்தினர்.
ஒத்துழைக்க வேண்டும்
அமெரிக்கக் கொள்கைக்கு எதிராக தனது தொலைபேசியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளை எழுதியதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்கா விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என தமது குடிமக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
அல்லது கைது செய்யப்படும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஜேர்மனி தமது குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் விசா அல்லது நுழைவு விலக்கு என்பது அமெரிக்காவில் நுழைவுக்கு உத்தரவாதம் அளிக்காது என குறிப்பிட்டுள்ளது.
டென்மார்க் அரசாங்கம் தெரிவிக்கையில், திருநங்கை என அடையாளம் காணப்பட்ட ஆண் அல்லது பெண் அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக இருந்தால் கோபன்ஹேகனில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொள்ள கோரியுள்ளனர்.
பின்லாந்தும் இதே எச்சரிக்கையை தமது குடிமக்களுக்கு விடுத்துள்ளது. இதனிடையே, 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருக்க திட்டமிடும் கனேடியர்கள், அமெரிக்க அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |