விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் - இந்தியா எத்தனை செயற்கை கோள்களை ஏவியுள்ளது?
விண்வெளிக்கு அதிக செயற்கைகோள்களை அனுப்பிய நாடுகள் குறித்து பார்க்கலாம்.
விண்வெளியில் ஆதிக்கம்
தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.
80க்கும் அதிகமான நாடுகள் இதுவரை விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ள.
தற்போது சுமார், 12,952 செயற்கைகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் தற்போது வரை, 145 புதிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
அமெரிக்கா
இதில், நவம்பர் 2024 நிலவரப்படி அமெரிக்கா 8,530 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது முதல் செயற்கைக்கோள் எக்ஸ்ப்ளோரர் 1, 1958 ஆம் ஆண்டில் ஏவியது.
தற்போது, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும், 7400 செயற்கைகோள்களை கொண்டுள்ளது.
ரஷ்யா
ரஷ்யா பூமியின் சுற்றுப்பாதையில், 1599 செயற்கைகோள்களை கொண்டு 2வது இடத்தில் உள்ளது.
2036 ஆம் ஆண்டிற்குள் இதனை 2600 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில், 35 சதவீத செயற்கைகோள்கள் வணிக செயற்கைகோள்களாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதன் மூலம், செயற்கைக்கோளை ஏவிய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றது.
சீனா
சீனா, ராணுவ மற்றும் வணிக நோக்கங்களுக்காக 906 செயற்கைகோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் ஏவியுள்ளது.
iSpace மற்றும் GalaxySpace போன்ற தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகளும் இதில் அடங்கியுள்ளது.
பிரித்தானியா
அறிவியல் ஆராய்ச்சி, உளவு, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக 763 செயற்கைகோள்களை பிரித்தானியா ஏவியுள்ளது.
விண்வெளியில், பிரித்தானியா வளர்ச்சியை Oneweb போன்ற தனியார் நிறுவனங்களும் ஆதரிக்கின்றன.
ஜப்பான்
ஜப்பான் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் புதுமை நோக்கங்களுக்காக 203 செயற்கைகோள்களை ஏவியுள்ளது.
தற்போது 5 QZSS (குவாசி-ஜெனித் செயற்கைக்கோள் அமைப்பு) செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் முன்னர் இதனை 7 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ்
இராணுவ உளவுத்துறை, பூமி கண்காணிப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக பிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவியுள்ள்ளது.
ஐரோப்பாவின் முன்னணி விண்வெளி நாடாக உள்ள பிரான்ஸ், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் (ESA) அதிக ஒத்துழைப்பை வழங்குகிறது.
CO3D, YODA போன்ற பல புதிய செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
இந்தியா
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, 136 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியா செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதில் பல செயற்கைகோள்கள் தனியார் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டவை.
இதில், சந்திராயன் 2 ஆர்பிட்டர், ஆதித்யா L1 ஆகிய திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
அடுத்த 3 ஆண்டுகளில், 100 முதல் 150 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |