ரயில் போக்குவரத்து இல்லாத நாடுகள் எவை தெரியுமா?
உலகில் ரயில்வே போக்குவரத்து இல்லாத நாடுகள் குறித்து இங்கு காண்போம்.
உலகின் சில நாடுகள் வரலாற்று சூழல்கள், புவியியல், பொருளாதாரம் காரணமாக ரயில்வே அமைப்புகளை கொண்டிருக்கவில்லை.
இந்த பயண அமைப்பை உலகளவில் சில நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு வானிலை, மக்கள்தொகை குறைவு, மாற்று போக்குவரத்து முறைகளை நம்பியிருப்பது அல்லது அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை காரணமாக உள்ளன.
ஐஸ்லாந்து
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் ரயில்வே நெட்வொர்க்குகள் உள்ளன. அதிலும் 3 தனித்துவமான ரயில்வே போக்குவரத்தை கொண்டுள்ளது.
ஆனால், ஆட்டோமொபைல்களின் போட்டி மற்றும் சிறிய அளவிலான மக்கள் தொகை, கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் உள்ளிட்ட காரணங்கள் இங்கு பொதுப்போக்குவரத்தாக ரயில்வே இல்லை.
1900களின் முற்பகுதிகளில் இங்கு ரயில் திட்டங்கள் இருந்தபோதிலும் பின்னர் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன.
எனினும், 2000களில் தலைநகரை மையமாகக் கொண்டு ரயில் பாதையை அமைப்பதற்கான முயற்சிகள் மீண்டும் தலைதூக்கியது குறிப்பிடத்தக்கது.
அன்டோரா
மற்றொரு ஐரோப்பிய அன்டோரா சிறிய நிலப்பரப்பில் 16வது இடத்தில் உள்ளது. இங்கு 1.2 மைல் தொலைவில் பிரெஞ்சு ரயில் பாதை இருந்தாலும், ரயில்வே உள்கட்டமைப்பு எதுவும் இல்லை.
அத்துடன் ரயில் நிலையம் அன்டோரா-லா-வெல்லாவிற்கு பேருந்து இணைப்பு வழியாக பிரான்சுடன் இணைகிறது.
ஏமன்
ஆப்பிரிக்க நாடான ஏமனில் சவாலான நிலப்பரப்பு மற்றும் நீண்டகால மோதல்கள் காரணமாக, ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.
சாலை போக்குவரத்து அங்கு பிரதானமாக இருப்பதும், விமானப் பயணம் பெரும்பாலும் விரும்பப்படுவதும் இங்குள்ளது.
லிபியா
ஒரு காலத்தில் இந்நாட்டில் ரயில்வே போக்குவரத்து இயங்கி வந்தது. ஆனால் உள்நாட்டுப் போரின்போது அகற்றப்பட்டது.
2001யில் புனரமைப்பு முயற்சிகள் தொடங்கப்பட்ட போதிலும் ரயில் சேவைகள் இங்கு இயங்கவில்லை.
கினியா-பிசாவ்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவ்-யில் ரயில் போக்குவரத்து இல்லை. 1998யில் இங்கு ரயில்வே அமைப்பை நிறுவ போர்த்துக்கல் உடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. கினியா நடைபாதை சாலைகள் மற்றும் பிற இடங்களில் செப்பனிடப்படாத பாதைகளை நம்பியுள்ளது.