சொந்தமாக நாணயம், மொழி இல்லாத ஐரோப்பிய நாடு... சார்லஸ் மன்னரை விட அதிகம் இளவரசரின் சொத்து மதிப்பு
இந்த சிறிய ஐரோப்பிய நாட்டிற்கு சொந்தமாக விமான நிலையம் இல்லை, சொந்தமாக நாணயமும் இல்லை, அதன் இளவரசரின் சொத்து மதிப்பு பிரித்தானிய மன்னர் சார்லஸை விட அதிகம்.
சிறிய ஐரோப்பிய நாடு
சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் மறைந்திருக்கும் ஒரு சிறிய ஐரோப்பிய நாடு, அதைப் பற்றி பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டதே இல்லை. இந்த நாட்டிற்கு விமான நிலையம் இல்லை, சொந்த நாணயமோ அல்லது உத்தியோகப்பூர்வ தேசிய மொழியோ இல்லை.
இருப்பினும், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. வியக்கவைக்கும் நிலப்பரப்பு, அரண்மனைகள், குற்ற விகிதம் மிகக் குறைவு, தற்போது நாடு முழுவதும் ஏழு பேர்கள் மட்டுமே சிறையில் உள்ளனர்.
இந்த நாட்டின் பெயர் Liechtenstein. சொந்த நாணயம் இல்லை என்பதால், இங்குள்ள மக்கள் சுவிஸ் பிராங்கையே பயன்படுத்துகின்றனர். தேசிய மொழி இல்லை என்பதால், இங்குள்ள மக்கள் ஜேர்மன் மொழி பேசுகின்றனர்.
மொத்த மக்கள் தொகையே 30,000 மட்டுமே. பிரித்தானிய அரச குடும்பத்தினரை விட இந்த நாடு செல்வம் மிகுந்தது. வேலை செய்யாமலேயே பலர் ஓய்வு நேரத்தை செலவிடும் அளவுக்கு செழிப்பு நிலவுகிறது, இதனால் அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்வதற்கு போதுமான நேரம் ஒதுக்க முடிகிறது.
இளவரசர் Hans-Adam II
மக்களிடம் இருந்து மிகக் குறைவான விகிதத்தில் வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் Liechtenstein எந்த வெளிநாட்டுக் கடனையும் சுமக்கவில்லை. ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதே சமூகத்தின் அடித்தளம், யாருக்கு அதிக சொத்து என்பது போன்ற பகட்டாகப் பேசுவது பொதுவாக அவமரியாதையாகக் கருதப்படுகிறது.
குற்ற விகிதம் மிக மிகக் குறைவு என்பதால், சுமார் 100 பொலிசார் மட்டுமே பொறுப்புகளில் உள்ளனர். Liechtenstein இளவரசர் Hans-Adam II-வின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
அத்துடன் அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கூறப்படுகிறது. பிரித்தானிய மன்னர் சார்லஸின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |