இத்தாலி பிரதமருக்கு புரபோஸ் செய்த ஒரு நாட்டின் பிரதமர்? ஒரு வைரல் வீடியோ
இத்தாலி நாட்டின் பிரதமரான ஜார்ஜியா மெலோனி மற்ற நாட்டின் தலைவர்களிடம் இனிமையாகப் பழகுபவர் என்பது உலகமே நன்கறிந்த ஒரு விடயம்.
குறிப்பாக கடந்த ஆண்டு, G7 உச்சி மாநாட்டின்போது, ஞாபக மறதியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எங்கோ நடந்து செல்ல, ஓடோடிச் சென்று அவரை பத்திரமாக மெலோனி அழைத்து வந்த காட்சியை யாரும் மறக்கமுடியாது.
இத்தாலி பிரதமருக்கு புரபோஸ் செய்த ஒரு நாட்டின் பிரதமர்?
இந்நிலையில், அல்பேனியா நாட்டின் பிரதமரான எடி ரமா, இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி முன், அவருக்கு புரபோஸ் செய்வது போல மண்டியிடுவதைக் காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🇦🇱🇮🇹 Albanian PM Edi Rama knelt before Italian PM Giorgia Meloni during their visit to Abu Dhabi, presenting her with a scarf as a birthday gift and referring to her as "Your Majesty".
— kos_data (@kos_data) January 15, 2025
He also tried to place the scarf over her head like a hijab. pic.twitter.com/QSqEuuBexM
புதன்கிழமையன்று அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாட்டின்போதுதான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
தன்னை நோக்கி நடந்துவந்த மெலோனியின் முன் எடி, கையில் ஏதோ ஒரு சிறு பெட்டியுடன் மண்டியிட, அங்கிருந்த அனைவரும் ஒருகணம் அதிர்ந்து, பின் சிரித்து சமாளித்தார்கள்.
பிறகுதான் தெரிந்தது, அன்று, மெலோனியின் 48ஆவது பிறந்தநாள் என்பது. அதாவது, மெலோனியைவிட எடி மிக அதிக உயரமானவர் என்பதால், உயரம் குறைந்த மெலோனிக்கு பரிசளிப்பதற்காகத்தான் எடி அவர் முன் மண்டியிட்டுள்ளார்.
ஓடோடி வந்து அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்ட மெலோனியை அன்புடன் அணைத்துக்கொண்ட எடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும் பாடினார்.
எடி அன்புடன் பரிசளித்த ஸ்கார்ஃப் முதலான பொருட்களைப் பெற்றுக்கொண்ட மெலோனி, முகம் மலர அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அல்பேனிய பிரதமர் எடி ரமா, மெலோனி முன் மண்டியிடும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |