பிரித்தானியாவில் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை: தம்பதியினர் கைது
பிரித்தானியாவில் குழந்தை காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய தம்பதியினர் கைது
பிரித்தானியாவின், சீகோம்ப், விராலில்(Wirral) உள்ள ஒரு வீட்டில் சிறு குழந்தை கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த தம்பதியினர் மீது கொடூர தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பெர்சி சாலையில் உள்ள சொத்து ஒன்றில் குழந்தையின் நலன் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் காயமடைந்த குழந்தையை கண்டுபிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்
சீகோம்ப் பகுதியை சேர்ந்த 36 வயதான கிளெவி பிர்ஜானி(Klevi Pirjani) மற்றும் 33 வயதான நிவால்டா சாண்டோஸ் பிர்ஜானி(Nivalda Santos Pirjani) ஆகியோர் கடுமையான உடல் காயம் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
காவலில் வைக்கப்பட்டு புதன்கிழமை லிவர்பூல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |