எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறி பரபரப்பைக் கிளப்பிய காதல் ஜோடி: வைரல் வீடியோ
காதல் ஜோடி ஒன்று 1454 அடி உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறி காதலை பரிமாறிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பரபரப்பு
நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் காதல் ஜோடி ஒன்று எந்தவொரு கயிறும் இல்லாமல் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷ்யாவை சேர்ந்த அஞ்சேலா மற்றும் இவான் என்ற காதல் ஜோடி பாதுகாப்பு கயிறு எதுவும் இல்லாமல் சுமார் 1454 அடி உயரம் உள்ள கட்டிடத்தில் மிகவும் ஆபத்தான முறையில் ஏறினர்.
Las autoridades de Nueva York arrestaron a la pareja acusada de escalar el Empire State Building y desplegar una enorme pancarta desde la cima del icónico rascacielos.
— Molusco (@Moluskein) July 2, 2026
De acuerdo con la policía, Angelina Nikolau e Ivan Kuznetsov enfrentan cargos relacionados con la peligrosa… pic.twitter.com/BeEjrJrptw
மேலும் கோபுரத்தின் உச்சியில் காதலின் சக்தி மற்றும் உலகின் அமைதியை வலியுறுத்தும் பதாகை ஒன்றை விரித்து காட்டி கவனத்தை ஈர்த்தனர்.
அத்துடன் இளைஞர் இவான் அந்தரத்தில் முழங்காலிட்டு தன்னுடைய காதல் தோழியான அஞ்சேலாவிடம் திருமண விருப்பதை வெளிப்படுத்தி மோதிரத்தையும் அணிவித்தார்.
இதனை கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கிப் போகினர்.
காதல் ஜோடி அதிரடி கைது
🚨BREAKING: Two people climbed the Empire State Building and hung a banner from the antenna: “When the power of love beats the love of power, the world knows peace.”
— Armando Pantoja (@_TallGuyTycoon) July 1, 2026
Some call it brave. Others call it reckless. pic.twitter.com/Q7Samc0pat
தகவலறிந்து வந்த நியூயார்க் பொலிஸார் சாகசம் செய்த காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் மீது தற்போது ஆபத்து விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |