வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி
பஞ்சாப்பில் வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதியை பிட்புல் நாய் பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியை தாக்கிய பிட்புல் நாய்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகரில் அங்கித் சபர்வால் மற்றும் அவரது மனைவி ஷிபாலி ஆகியோர் வாடகைக்கு வீடு ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த வீட்டின் கதவை திறந்த போது உள்ளிருந்து பாய்ந்து வந்த பிட்புல் ரக நாய் ஒன்று ஷிபாலியை கடுமையாக கடிக்க தொடங்கியுள்ளது.
Patiala, Punjab - A couple was attacked by a pitbull dog in Patiala while they were visiting a property with a real estate dealer. The husband and wife had gone to inspect a house for purchase. When they rang the doorbell, a pitbull inside the premises suddenly lunged at them.… pic.twitter.com/FEP3VVyKoU
— NextMinute News (@nextminutenews7) August 12, 2026
இதில் படுகாயமடைந்த ஷிபாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மனைவியை காப்பாற்ற முயன்ற அங்கித்திற்கும் கால்கள் மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், தம்பதியை நாய் விடாமல் கடிப்பதும், அவர்களை காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் குச்சியால் நாயை அடித்து விலக்குவதையும் பார்க்க முடிகிறது.
பொலிஸார் வழக்குப்பதிவு

இந்நிலையில் நாயை சுதந்திரமாக சுற்ற அனுமதித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரத்தில் ஆக்ரோஷமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று பாட்டியாலா மேயர் குந்தன் கோகியா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |