தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்: ChatGPT-யில் தேடிய சர்ச்சைக்குரிய விவகாரம்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் தாய் மற்றும் தம்பியை கொன்றதாக 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் ஆக்டன் பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு சொந்தமான சொத்தில் வசித்து வந்த 45 வயது தயது சுதா வெங்கடேசன் மற்றும் அவரது 14 வயது மகன் சித்தார்த் அரவிந்த் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கில் கொல்லப்பட்டவர்களின் மகன் மற்றும் சகோதரரான 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் அரவிந்த் மீது முறைப்படி கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home.
— Stephen Quinn (@stephenquinntv) August 12, 2026
District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”
🔗:… pic.twitter.com/CrUPnkgY0R
அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலை வழக்குகள், இரண்டு தாக்குதல் வழக்குகள் மற்றும் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தை திருடிச் சென்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் மற்றும் முறை குறித்து தலைமை மருத்துவ பரிசோதகர்கள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது நடவடிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய இணையதள தேடல்
WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home.
— Stephen Quinn (@stephenquinntv) August 12, 2026
District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”
🔗:… pic.twitter.com/CrUPnkgY0R
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாயாரின் காரில் சந்தேகத்திற்குரிய அர்ஜுன் தப்பியோடியதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து தேடுதல் வேட்டை முடக்கி விட்டிருந்த அதிகாரிகள், வேலாண்ட் பகுதி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய காரை கண்டுபிடித்து அர்ஜுனையும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சொந்த குடும்பத்தினரையே கொல்வது தொடர்பான தத்துவார்த்த கருத்துகளையும் கற்பனைகளையும் அர்ஜுன் அரவிந்த் இணையம் மற்றும் ChatGPT-யில் தேடி இருப்பதாக டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |