உணர்ச்சிவசப்பட்டு அவசர கதியில் எடுத்த ஒரு முடிவால் கோடீஸ்வரர்களாக மாறிய இளம்தம்பதி!
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய தம்பதி Mahzooz draw குலுக்கல் போட்டியின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.
இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மிர் (34). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில் மிர்ருக்கு Dubai’s Mahzooz millionaire டிரா குலுக்கல் போட்டியில் Dh1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இந்த குலுக்கல் போட்டி நேரலை துவங்குவதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் தான், உணர்ச்சிவசப்பட்டு அவசர கதியில் போட்டியில் விளையாட மிர் முடிவு செய்தார்.
அவர் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த அவசர முடிவு அவரை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தான் மிர் மனைவிக்கு வேறு ஒரு குலுக்கல் டிராவில் Dh1,000 பரிசு விழுந்தது.
மிர் கூறுகையில், நான் என் பணியில் பிசியாக இருந்ததால் உடனடியாக குலுக்கல் முடிவுகளை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் நான் வேலையில் இருந்தபோது எனக்கு ஒரு அழைப்பு வந்தது, நான் 1 மில்லியன் திர்ஹம் வென்றுள்ளேன் என்று அதில் கூறினர்.
இது ஏதோ வானொலி நிலையத்தில் இருந்து கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பின்னர் அந்த அழைப்பு உண்மையானது என்பதை நான் உணர்ந்தபோது,மகிழ்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை என கூறியுள்ளார்.
இதனிடையில், பரிசுத் தொகையில் ஒரு பகுதியை சேமிப்பிற்காக ஒதுக்கிய பிறகு இந்தியாவில் சில பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்ய மிர் திட்டமிட்டுள்ளார்.