1,454 அடி உயர கட்டிடத்தின் டவரில் ஏறிய இளம் ஜோடி: அடுத்து செய்த செயல்
அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள 1,454 அடி உயர கட்டிடத்தின் டவரில் ஏறிய இளம் ஜோடி செய்த செயலைக் காட்டும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துவருகின்றன.
1,454 அடி உயர கட்டிடத்தின் டவரில்...
நியூயார்க்கிலுள்ள Empire State Building என்னும் கட்டிடத்திலுள்ள டவரில் கருப்பு நிற உடை அணிந்த ஒரு இளம் ஜோடி ஏறும் காட்சியைக் கண்டு நகரமே அதிர்ந்தது.
🚨 BREAKING: 2 people have climbed the Empire State Building in New York to fly a flag. The flag reads “When the power of love beats the love of power the world knows peace.” pic.twitter.com/YrIudqf9Lx
— FOX 4 NEWS (@FOX4) July 1, 2026
நேற்று மதியம் 12.30 மணியளவில், கட்டிடத்தின் உச்சியிலுள்ள டவர் மீது ஏறிய அந்த ஜோடி, உலக அமைதி கோரும் பேனர் ஒன்றை பறக்கவிட்டுள்ளது.
பின்னர், இருவருமாக கீழிறங்க, உட்கார வசதியான ஒரு இடத்தில் முழங்காலிட்ட அந்த நபர், அந்தப் பெண்ணுக்கு புரபோஸ் செய்வதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவர் புரபோஸ் செய்ய, அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ள, இருவருமாக மகிழ்ச்சியில் கட்டியணைத்துக்கொள்கிறார்கள்.
இதற்கிடையில், தகவலறிந்த பொலிசார் வந்து அவர்கள் இருவரையும் கைது செய்ய, எந்த எதிர்ப்பும் காட்டாமல் பொலிசாருடன் சென்றுள்ளது அந்த ஜோடி.
🚨 BREAKING: DEATH-DEFYING DAREDEVILS DEFY DEATH… AND GET CUFFED! 😱
— The Republic Watch (@RepublicWatch55) July 2, 2026
Two Russian thrill-seekers just CLIMBED the EMPIRE STATE BUILDING like it was a jungle gym — no ropes, no harnesses, 1,454 FEET OF PURE TERROR — unfurled a massive PEACE banner, and got ENGAGED at the tip of… pic.twitter.com/kigTQwVvEQ
யார் அவர்கள்?
அந்த இருவரும் ரஷ்ய நாட்டவர்கள். இதுபோல் பல உயரமான கட்டிடங்களில் ஏறி அதை வீடியோவாக எடுத்து தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றுவது அவர்கள் வழக்கம்.

அந்தப் பெண்ணின் பெயர் ஏஞ்சலா (Angela Nikolau) அவரது காதலர் பெயர் வன்யா (Vanya Beerkus). இதற்கிடையில், ஏஞ்சலா அந்தக் கட்டிடத்தின் மீது ஏறிய விடயம் குறித்து அவரது தந்தையிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், எந்த நாடாக இருந்தால் என்ன, அதன் உச்சியில் ஏறுவது சாதாரண விடயம்தானே என்று கூற, உங்கள் மகள் இப்படிச் செய்வது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தவில்லையா என்றால், நான் எதற்கு கவலைப்படவேண்டும், நானே அப்படி கூரைகள் மீது ஏறுவேனே என்கிறார் அவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |