இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்: அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்ட ரஷ்ய தம்பதி

Russian Federation Child Abuse Crime
By Arbin Jan 16, 2023 09:46 AM GMT
Report

ரஷ்ய இளம் தம்பதி ஒன்று சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டு, இணையத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணில் பட்டுள்ளது.

ஸ்தம்பித்துப் போன இளம் தம்பதி

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் குடியிருக்கும் அந்த இளம் தம்பதி, சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்கும் திட்டத்துடன் இணையத்தில் தேடி வந்துள்ளனர். ஆனால் மிருகங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் பார்வையிட்டவர்கள், பூனைகளுக்கான பகுதியில் சென்று ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்: அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்ட ரஷ்ய தம்பதி | Couple Find Russian Child Sale In Sick Advert

அப்பகுதியில், 5 வயது சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து ஒரு நொடி உறைந்து போயுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் இணைய செய்தி பக்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், சிறுவன் ஒருவரின் புகைப்படத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது உண்மை தான், மாஸ்கோவில் இருந்தே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவனை வாங்கும் எண்ணம் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொண்டால், விலை என்ன என்பது தெரிவிக்கப்படும் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு வாங்க புறப்பட்ட தம்பதி, இறுதியில் பொலிசாரை தொடர்புகொண்டு, சிறுவன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தகவலை புகாரளித்துள்ளனர்.

சிறுவன் விற்பனைக்கு

தற்போது பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் விளம்பரம் செய்யப்பட்ட அந்த இணைய பக்கத்தின் நிர்வாகி தெரிவிக்கையில், இது மிக மோசமான பகடியாக இருக்கலாம் அல்லது இதன் பின்னணியில் அதிர்ச்சி சம்பவம் ஏதும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஜூலை 2022ல் பச்சிளம் குழந்தை ஒன்றை 3,000 பவுண்டுகளுக்கு ரஷ்ய தாயார் ஒருவர் விற்பனை செய்துள்ளதுடன், அந்த தொகையில் தமது மூக்கை அழகு படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்: அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்ட ரஷ்ய தம்பதி | Couple Find Russian Child Sale In Sick Advert

@getty

பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், குழந்தையை 3,000 பவுண்டுகளுக்கு வாங்கிய தம்பதியானது, குழந்தை பிறக்கும் முன்னரே 274 பவுண்டுகள் தொகையை முன்பணமாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

ஆனால், குழந்தையை மொத்த தொகையும் செலுத்தி வாங்கிய பின்னர், திடீரென்று நோய்வாய்ப்பட, அந்த தம்பதியிடம் பிறப்பு சான்றிதழ் கேட்டுள்ளனர் மருத்துவர்கள்.

இதனையடுத்து, அந்த குழந்தையின் தாயாருக்கு மேலும் 1,370 பவுண்டுகள் செலுத்தி பிறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். இருப்பினும், பொலிசாரால் அந்த தம்பதி கைது செய்யப்பட்டதுடன், இந்த விவகாரத்தின் பின்னணியில் மனித கடத்தல் இருப்பதையும் கண்டறிந்தனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US