அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்
அமெரிக்காவில் வாழும் ஒரு வெள்ளையின தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாததால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.
குழந்தை பிறந்தபோது, குழந்தையைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்
டிஃபனி, ஸ்டீவன் (Tiffany Score and Steven Mills) தம்பதியருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லை.

ஆகவே, செயற்கைக் கருத்தரித்தல் முறையில் கருவுற்ற டிஃபனி, டிசம்பர் மாதம் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்தபோது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அது ஒரு வெள்ளையினக் குழந்தை இல்லை.
அத்துடன், DNA சோதனையிலும், அந்தக் குழந்தையின் உடலில் அவர்கள் இருவருடைய DNAவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
விடயம் என்னவென்றால், இப்போது Shea என பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தை அவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள்.

அவர்களும் அவளை தங்கள் சொந்தக் குழந்தையாக கண்ணும் கருத்துமாக, அன்பும் பாசமுமாக வளர்த்துவருகிறார்கள்.
ஆனாலும், அவளுடைய உண்மையான பெற்றோர் அவளைத் தேடிக்கொண்டிருக்கலாம், ஒருவேளை அவர்கள் குழந்தையை தங்களிடமிருந்து பிரித்துவிடலாம் என்ற கவலை தம்பதியருக்கு உள்ளது.
அதே நேரத்தில், தங்கள் கருமுட்டை எங்கே என்னும் கேள்விக்கு இன்னமும் பதிலில்லை என்று கூறும் தம்பதியர், கருமுட்டைகளை மாற்றிய செயற்கை கருத்தரித்தல் நிலையம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |