பிரான்ஸ் கலவரங்களுக்கு நடுவே கவனம் ஈர்த்த ஜோடி: ஒரு வைரல் வீடியோ
A couple became an overnight viral sensation after calmly enjoying outdoor drinks while tear gas and violent protests unfolded around them in France: பிரான்சில் கலவரங்களுக்கு நடுவிலும் ஒரு ஜோடி அமைதியாக பானங்கள் அருந்திக்கொண்டிருந்த காட்சி வைரலாகியுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
கவனம் ஈர்த்த ஜோடி

இந்நிலையில், கலவரங்களுக்கு நடுவே, எதைக் குறித்தும் கவலைப்படாமல், பானம் அருந்திக்கொண்டும் புகை பிடித்தபடி பேசிக்கொண்டும் அமர்ந்திருந்த ஒரு ஜோடி கவனம் ஈர்த்துள்ளது.
Couple Enjoys Drinks In Paris As Fires Rage Nearby Amid Protests In France Read more: https://t.co/i0f4blnyge https://t.co/3G7hK33Ygs
— NDTV World (@NDTVWorld) October 20, 2026
சற்று தொலைவிலேயே போராட்டக்காரர்கள் வைத்த தீ கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, அதை சற்றும் கொண்டு கொள்ளாமல் அந்த ஆணும் பெண்ணும் அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Arc de Triomphe என்னுமிடத்துக்கு அருகில், ஒரு உணவகத்தில், அதுவும், வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகள் அமர்ந்தபடி அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.