ஒரே இடத்தில் இருந்தும் சந்திக்க முடியவில்லை! கனடாவில் அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி
கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜான் (85). இவர் மனைவி ஹெலன் (78). இருவருக்கும் 55 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
தம்பதிக்கு மூன்று பிள்ளைகளும், ஐந்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் ஒரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பிறகு ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. .
இந்த நிலையில் ஜான் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த சில நாட்களில் ஹெலனும் உயிரிழந்துள்ளார்.
உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக ஜான் - ஹெலன் தம்பதி வாழ்ந்து வந்தனர் என குடும்பத்தார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.