வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் தம்பதி! வேதனையில் பெற்றோர்... முழு தகவல்
வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி.
தம்பதியின் குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தாத்தா, பாட்டி வலியுறுத்தல்.
வெளிநாட்டில் தமிழ் தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின்மதுரை மாவட்டம் இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. தம்பதியின் மகன் பிரவீன்குமார் அமெரிக்காவில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், தமிழ்ச்செல்வி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விஸ்ருத் மிலன்(2) என்ற மகன் உள்ளார். கடந்த மே 2ம் திகதி அமெரிக்காவில் பிரவீன்குமார், தமிழ்ச்செல்வி தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இருவரது உடல்களையும் ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர்.
பேரன் அமெரிக்காவில் பிறந்ததால், குழந்தை அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளது. இதனால் குழந்தையை இந்தியா அழைத்து வரமுடியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மீண்டும் அமெரிக்கா சென்றபோது, குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
மகனும், மருமகளும் இறந்த நிலையில், பேரனையாவது அழைத்து வரவேண்டும் என தவிப்பில் உள்ளனர். எனவே, தங்களது பேரனை அமெரிக்காவிலிருந்து அழைத்து வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியும், அவரது மனைவியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக மகன் மற்றும் மருமகளை நினைத்து ஏங்குவதை விட பேரனை அழைத்து வர முடியவில்லையே என்ற வேதனை அதிகமாக உள்ளதாகவும், தங்களுக்கு பின் தங்களின் ஒரே வாரிசாக உள்ள பேரனை அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.