4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியுடன் விநாயகர் சிலையை கரைத்த தம்பதியினர்! பின்னர் நடந்தது?
4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுக்க மறந்து விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த 7 -ம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர் நீர்நிலைகளில் கரைத்தனர்.
இந்நிலையில், தம்பதியினர் ஒருவர் 4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுக்க மறந்து விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர்.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் ராமையா மற்றும் உமா தேவி. இவர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்களது வீட்டில் விநாயகர் சிலையை நிறுவினர்.
பின்னர், சிலைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை அணிவித்தனர். இதன் பின்னர், கடந்த சனிக்கிழமை இரவு விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர்.
ஆனால், அவர்கள் சிலைக்கு அணிவித்திருந்த தங்க சங்கிலியை எடுக்க மறந்துள்ளனர். பின்னர், சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு சென்று தங்க சங்கிலியை தேடியுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் தங்க சங்கிலியை பார்த்ததாகவும், கவரிங் என நினைத்து அதை எடுக்காமல் விட்டதாகவும் கூறினர்.
இதையடுத்து அவர்கள் மாகடி சாலை காவல் நிலையம் மற்றும் கோவிந்த் ராஜ்நகர் எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டனர். சுமார் 4 மணிநேர தேடலுக்கு பிறகு தங்க சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |