விவகாரத்து செய்த மனைவியுடன் 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம்! காதலை வெளிப்படுத்திய 94 வயது முதியவர்
அமெரிக்காவில் 94 வயது முதியவர் ஒருவர், விவாகரத்து செய்த தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்புவதாக காதலை வெளிப்படுத்தினார்.
94 வயது முதியவர்
பென்சில்வேனியாவைச் சேர்ந்த 94 வயது முதியவர் ராபர்ட் வென்ரிச். இவர் தனது மனைவி Fay Gableஐ 50 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார்.
1951ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு 4 பிள்ளைகள் பிறந்தன. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக இவர்கள் 1975ஆம் ஆண்டில் பிரிந்தனர்.
இருவரும் வேறு திருமணம் செய்துகொண்டனர். தற்போது தங்கள் துணையை இருவரும் இழந்துள்ளனர்.
இளைஞர்களைப் போல காதலிக்கிறார்கள்
இந்த நிலையில், ராபர்ட் தனது முன்னாள் மனைவிக்கு மீண்டும் காதலை வெளிப்படுத்தினார். Fay Gableயும் அவரது காதலை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இந்த தம்பதியின் இளைய மகள் கரோல் ஸ்மித் கூறும்போது, "அவர்கள் இரண்டு இளைஞர்களைப் போல காதலிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாக செய்கிறார்கள்" என்றார்.
நாங்கள் இப்போது போல அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நன்றாக இருப்போம் என்று நான் நினைக்கிறேன் என ராபர்ட் வென்ரிச் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |