என்னை உண்மையா காதலிக்கிறியா? காரில் காதலியை கட்டி வைத்து துன்புறுத்திய இளைஞர்
ரஷ்யாவில் காதலியின் நம்பிக்கையை சோதிக்கும் விதத்தில் காரின் மேல் காதலியை கட்டி வைத்து சாலையில் வேகமாக காரை ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் காதல் ஜோடிகள் நிறைந்துள்ளனர். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை நிரூபிக்க பல சாகசங்களை முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் ரஷ்யாவில் உண்மையான காதலை சோதிக்க நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த இளைஞர், நீண்ட நாளாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.
அந்த பெண்ணின் உண்மையான காதலை சோதிக்க காரில் மேல் கட்டி வைத்து ஒரு கையை மட்டும் பிடித்து கொண்டு நடுரோட்டில் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
இதனை வேடிக்கை பார்த்தவர்களுள் ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ மக்கள் மத்தியில் வைரலாக பரவி எதிர்ப்பு தொடங்கியதால் அவரை கண்டிக்கும் விதத்தில் இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.