போரை நிறுத்த கோரி சமூகவலைத்தளத்தில் அதிவேகமாய் பரவும் காதல் ஜோடியின் பழைய புகைப்படம்!
ரஷ்யா உக்ரைன் இடையே மூன்றாவது நாளாக போர் நடைபெற்றுவரும் இந்த சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காதல் ஜோடியின் பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில் உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பல நாடுகளும் ரஷ்யாவிடம் கோரிக்கை முன்வைத்துவருகின்றனர்.
இந்தநிலையில் இந்தப்போரை நிறுத்தி, உலகில் அமைதி மற்றும் காதலை நிலைநாட்டும் நோக்கில் 2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட காதல் ஜோடியின் புகைப்படம் ஒன்றை இணையதளவாசிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்த கடுமையான போர் மற்றும் மோதலில், அன்பு, அமைதி, காதல் மற்றும் சகவாழ்வு வெற்றிபெறும் என்று நம்புவோம் என கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
Poignant: A man draped in the Ukrainian flag embraces a woman wearing the Russian flag. Let us hope love, peace & co-existence triumph over war & conflict. pic.twitter.com/WTwSOBgIFK
— Shashi Tharoor (@ShashiTharoor) February 25, 2022
இந்த புகைப்படத்தில் ஆண் ஒருவர் உக்ரைன் நாட்டு தேசிய கோடியை போர்த்திக்கொண்டும், அவரின் காதலி ரஷ்ய நாட்டு தேசியக்கொடியை போர்த்திக்கொண்டும் கட்டியணைத்தபடி காதலை பரிமாறி நிற்கின்றனர்.
இது கடந்த 2019ம் ஆண்டு போலந்தில் உள்ள வார்சாவில் நடைபெற்ற பெலாருசன் ராப்பர் மேக்ஸ் கோர்ஷ்யின் கச்சேரியில் ஜூலியானா குஸ்னெட்சோவாவும் அவரது வருங்கால மனைவியும் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.