கணவன்-மனைவி ஒன்றாக குளிக்கவும்., தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு ஆலோசனை
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia) தண்ணீரை சேமிக்க தம்பதிகள் ஒன்றாக குளிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டா (Bogota) மக்களுக்கு மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ காலன் (Mayor Carlos Galan) வித்தியாசமான ஆலோசனைகளை வழங்கினார்.
தண்ணீரை சேமிக்க, தம்பதியினர் ஒன்றாக குளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை அல்லது வெளியில் செல்ல முடியாத நாட்களில் குளிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.
பொகோட்டாவில் தற்போதைய நீர் இருப்பு வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திற்கு குறைந்துள்ளதன் பின்னணியில் ஒரு சொட்டு நீர் கூட வீணடிக்கப்படக் கூடாது எனவும், எனவே இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியாவில் கோடை காலம் மிகவும் மோசமாக இருப்பதால் நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்டுவிட்டன. நகரத்திற்கு தேவையான நீர் மூன்று நீர்த்தேக்கங்கள் மூலம் 70% தண்ணீர் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த நீர்த்தேக்கங்களில் இப்போது 17 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது.
கடந்த 40 வருடங்களில் இந்த நீர்த்தேக்கங்களில் பதிவான மிகக் குறைந்த நீர் மட்டம் இதுவாகும் என கார்லோஸ் பெர்னாண்டோ கலன் தெரிவித்தார்.
இதனால் மக்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காதீர்கள். இதைப் பின்பற்றாவிட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Couples in Bogota asked to shower together, water, historic drought, Colombian capital of Bogota