முறைப்படி குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள்... ராஜ குடும்ப உறுப்பினருக்கு சுவிஸ் நீதிமன்றம் ஆலோசனை
ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தானாகவே தனக்கு சுவிஸ் குடியுரிமை கிடைத்திருக்கவேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், எல்லோரையும்போல முறைப்படி குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள் என அவருக்கு அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம்.
நீதிமன்றம் சென்ற ராஜ குடும்ப உறுப்பினர்
ஆஸ்திரியா நாட்டவரான, ராஜ குடும்பப் பின்னணி கொண்ட ஒருவர், தனது பாட்டியார் சுவிஸ் குடிமகளாக இருந்ததால், ’hereditary right of citizenship’ முறையில் தானாகவே தனக்கு சுவிஸ் குடியுரிமை கிடைத்திருக்கவேண்டும் என வாதம் முன்வைத்திருந்தார்.
1939ஆம் ஆண்டு, நிபந்தனைகள் எதுவுமின்றி வழங்கப்படும் ‘perpetual citizenship’ என்னும் முறைப்படி குடியுரிமை பெற்றிருந்தார் ஒரு பெண்மணி.
ஆனால், அவர் 1961ஆம் ஆண்டு, ஆஸ்திரியா நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆகவே, அவர் தனது சுவிஸ் குடியுரிமையை இழந்தார்.
தான் சுவிஸ் குடிமகளாகவே நீடிக்க நினைத்திருந்தால், அவர் தனது திருமணத்தின்போது அதை பிரகடனம் செய்திருக்கவேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
அந்த பெண்மணியின் பேரன்தான் தற்போது தானாகவே தனக்கு சுவிஸ் குடியுரிமை கிடைத்திருக்கவேண்டும் என வாதம் முன்வைத்துள்ளவர்!
பின்னாட்களில் அந்தப் பெண்மணியும், அவரது மகளும், மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொண்டார்கள். விடயம் என்னவென்றால், தற்போது குடியுரிமைக்காக நீதிமன்றம் சென்றுள்ள நபர் பிறந்து ஓராண்டு ஆன பிறகுதான் அவரது தாய் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளார்.
ஆகவே, வாதிக்கு தானாகவே சுவிஸ் குடியுரிமை கிடைக்காது என நீதிமன்றம் கூறிவிட்டது.
அத்துடன், எல்லோரையும்போல முறைப்படி குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள் என்றும் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம்.
ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஃபெடரல் உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறார் அந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த நபர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |