ஜீவனாம்ச பணத்தை சாக்கு மூட்டைகளில் சில்லறையாக கொடுத்த கணவன்! அனுமதித்த நீதிமன்றம்
ஜீவனாம்ச தொகையை 1 ரூபாய், 2 ரூபாய் சில்லறைகளாக ஏழு சாக்குமூட்டைகளில் கொடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
விவாகரத்து வழக்கு
ஜெய்ப்பூரைச் சேர்ந்த தஷ்ரத் என்பவருக்கும் அவரது மனைவி சீமா குமாவத்துக்குமான விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கணவர் தஷ்ரத் குமாவத்துக்கு மாதம் 5000 ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அவர் அதை கடந்த 11 மாதங்களாக செலுத்தவில்லை.
Getty Images
கடந்த 11 மாதங்களாக ஜீவனாம்சம் நிறுத்தப்பட்டதை அடுத்து ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் தஷ்ரத் கைது செய்யப்பட்டு ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏழு சாக்கு மூட்டைகளில் 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்கள்
அப்போது தஷ்ரத்தின் உறவினர்கள் 11 மாத நிலுவைத் தொகையான 55,000 ரூபாயை, 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களாக 280 கிலோ எடையுள்ள நாணயங்களை ஏழு சாக்கு மூட்டைகளில் நிரப்பிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அந்தத் தொகையை நாணயமாகச் செலுத்த அனுமதித்த நீதிமன்றம், அந்த நாணயங்களைத் துல்லியமாக எண்ணி, ஆயிரம் ரூபாய் பொட்டலங்களாக அப் ண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
Getty Images
நீதிமன்றம் அனுமதி
இதனிடையே ஜீவனாம்சத் தொகையை காசுகளாக வழங்க அனுமதிக்கக் கூடாது என்றும், அது அப்பெண்ணுக்கு மன ரீதியான சித்திரவதை என்றும் சீமா குமாவத்தின் வக்கீல் ராம்பிரகாஷ் குமாவத் வாதிட்டார்.
இது அவரை துன்புறுத்துவதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறையில் செய்யப்பட்டது என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
ஆனால் இந்த நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும், அவற்றை யாரும் ஏற்க மறுக்க முடியாது என்றும் கணவர் சார்பில் வாதிடப்பட்டது. இறுதியில், நாணயங்களை கொடுக்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.
Maintenance Amount, Husband, Wife, Divorce Case, Money
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |