குழந்தை மீது உரிமை தாய்க்கு மட்டும் இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு நீதிமன்றம் கண்டனம்
குழந்தை மீது தாய்க்கும் மட்டும் உரிமை கிடையாது என்று குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் தவானின் மனைவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷிகர் தவானின் மனைவிக்கு நீதிமன்றம் கண்டனம்
கடந்த 2012ம் ஆண்டு இந்திய பிரபல கிரிக்கெட் வீரராக தவான், ஆயிஷா முகர்ஜியு என்பவரை திருமணம் செய்தார். ஆயிஷா தவானை விட 12 வயது மூத்தவர். இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று சென்றுவிட்டனர். பிரிந்து வாழும் இவர்கள் அவர்களது குழந்தை தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது ஆயிஷா ஆஸ்திரேலியாவில் உள்ளார். இந்நிலையில், நேற்று டெல்லி பாட்டியாலாவில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், கடந்த 2020ம் ஆண்டு முதல் குழந்தையை பார்க்க வில்லை என்று தவானின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஷ்குமார், குழந்தையை இந்தியாவிற்கு ஆயிஷா அழைத்து வர வேண்டும்.
குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை, குழந்தை தனது தாத்தா, பாட்டியை சந்திக்க வேண்டும். தவானின் இந்த விருப்பம் மிகவும் நியாயமானது.
குழந்தை ஷிகர் தவானுடன் இருப்பதை விரும்புகிறார். ஆனால், ஆயிஷா ஏன் அனுமதிக்க மறுக்கிறார்.
எனவே குழந்தையை ஆயிஷா இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.