சித்ரா பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்படும் கணவர் ஹேமந்த் தரப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தை சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமந்த் தரப்பில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
காணொலிக் காட்சி வாயிலாக நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை இன்னும் முடியவில்லை என்றும், சித்ராவின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும் ஹேமந்த் தரப்பு செயல்படுவதாகவும் கூறி ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஹேமந்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.