இலங்கை புதுப்பெண்ணிடம் தாலியை பறிமுதல் செய்த விவகாரம்: நியாயமற்றது என அதிரடி உத்தரவு
இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் தாலி உட்பட தங்க நகைகளை பறிமுதல் செய்தது நியாயமற்றது எனக் கூறி, அவரிடம் திருப்பி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமணம்
2023ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண், சென்னையில் ஜெயகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் அவரது கணவர் பிரான்ஸ் சென்ற நிலையில் மனைவிக்கு விசா ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து தனுஷிகாவுக்கு விசா கிடைக்கவே, பிரான்ஸ் செல்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
அதன்படி சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி, தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பாக தனுஷிகாவின் கணவர் ஜெயகாந்த் நகைகளை திருப்பி அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
![அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய பஞ்சாப் பெண்.., கண்ணீருடன் பகிர்ந்த தகவல்](https://cdn.ibcstack.com/article/e3a4bbb0-d51c-409e-8fb4-4abc24b85e29/25-67a5a0ed46588-sm.webp)
அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய பஞ்சாப் பெண்.., கண்ணீருடன் பகிர்ந்த தகவல்
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என குறிப்பிட்டது.
அத்துடன் பெண்ணிடம் பறிமுதல் செய்த 216 கிராம் எடை கொண்ட தாலி உட்பட நகைகளை திருப்பி அளிக்குமாறு சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |