மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு

Delhi Capitals TATA IPL West Bengal
By Karthikraja Jul 20, 2026 01:03 PM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபிஷேக் போரெல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு | Court Order To Arrest Dc Cricketer Abishek Porel

இந்நிலையில், அபிஷேக் போரெலை கைது செய்ய காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு மிரட்டியதாக தெரிவித்த புகாரில் அபிஷேக் போரெல் மற்றும் மற்றோரு நபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாணவி அளித்த புகாரில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் அவருடன் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி வந்துள்ளார். 

சட்டமன்றத்தை பூட்டும்போது எலும்பு இருக்காது - முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது

சட்டமன்றத்தை பூட்டும்போது எலும்பு இருக்காது - முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது

அபிஷேக் போரெல் கிரிக்கெட் வீரராகப் புகழ் பெறத் தொடங்கியதும், ​​அவர் தன்னை விட்டு விலகி இருப்பதை உணர்ந்த மாணவி, வாக்குறுதியளித்தபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கோரியுள்ளார்.

அதற்கு மறுத்த அபிஷேக் போரெல் மாணவியை அடித்ததாகவும், அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்ய உத்தரவு

இந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. 

மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு | Court Order To Arrest Dc Cricketer Abishek Porel

மாணவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் இந்த மாணவியை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து, பின்னர் அவர்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் உள்ள செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை கைப்பற்றி தனிப்பட்ட புகைப்படங்கள் அழிக்குமாறு ஹூக்ளியில் உள்ள மக்ரா காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் ஒரு விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US