கொரோனா ஊரடங்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவை உடனடியாக ரத்து செய்யுமாறு நெதர்லாந்து நீதிமன்றம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜனவரி 23 அன்று ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவு படி, நெதர்லாந்தில் இரவு 9 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை அத்தியாவசிய காரணங்களின்றி யாரும் வெளியே வர அனுமதியில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் இந்த உத்தரவு மார்ச் 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரடங்கு எதிர்ப்பு குழுக்கள் பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு எதிர்ப்பு குழுவின் கோரிக்கையை ஆதரித்துள்ளது.