நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: காசோலை மோசடி வழக்கில் தீர்ப்பு
தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசோலை மோசடி
நடிகர் விமல் நடித்து, தயாரித்த மன்னன் வகையறா திரைப்படத்திற்காக பைனான்சியர் கோபி என்ற நபரிடம் இருந்து ரூ 4.5 கோடியை விமல் பெற்றுள்ளார்.
திரைப்படம் வெளியாகிய பிறகும் விமல் கொடுத்த தொகையை திருப்பி தராமல் இருந்துள்ளார்.
பின்னர் வாங்கி தொகைக்கான காசோலை ஒன்றை பைனான்சியர் கோபியிடம் கொடுத்துள்ளார் விமல், ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் கோபி சென்னையில் உள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
நீதிமன்ற விசாரணையில் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் வாங்கிய தொகையை முறையாக திருப்பிச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விமல் தரப்பினர் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |