அஜித்குமார் கொலை தொடர்பான விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அளித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றம் நிராகரிப்பு
தமிழக மாவட்டமான சிவகங்கை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார்.
இவரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருமாறு உயர்நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் மனு தாக்கல் செய்திருந்தது.
மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்றும், ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |