ஆவணங்களற்ற பெண்ணுக்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி: நீதிமன்றம் உத்தரவு
Court rules undocumented mother can stay in Switzerland: ஆவணங்களற்ற பெண்ணொருவர் சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதிக்குமாறு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
முறையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத வெளிநாட்டுப் பெண்ணொருவரை சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதிக்குமாறு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களற்ற பெண்ணுக்கு அனுமதி
கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், 2008ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.
புகலிடம் கோரி அவர் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நான்கு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் அந்தப் பெண்.

பின்னர் அந்தப் பெண்ணின் கணவர் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பி அங்கு வேலை செய்யத் துவங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தம்பதியரின் பிள்ளைகள் ஒவ்வொருவராக சுவிட்சர்லாந்துக்குத் திரும்ப, கடைசியாக, அந்தப் பெண்ணும் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். ஆனால், அவர் முறைப்படியான விசா பெறவில்லை!
அவர் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில், அவரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அவருக்கு குடியிருப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண் Bern நிர்வாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் கற்றல் குறைபாடு கொண்டவர்கள்.
அப்படியிருக்கும்போது, அந்தக் குழந்தைகளுடன் அவர்களுடைய தந்தையும் அந்தப் பெண்ணுடன் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று கூறியுள்ள நீதிமன்றம், அந்தப் பிள்ளைகளின் தாய்க்கு குடியிருப்பு அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஒரு தாய் தனது குடும்பத்துடன் தங்கியிருப்பதில் உள்ள தனிப்பட்ட நலன், அவரது அடையாளத்திற்கான ஆதாரத்தைப் பெறும் விடயத்தைவிட முக்கியமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.