கொரோனா தடுப்பூசியால் ஏற்படவிருக்கும் ஆபத்து - ஆய்வில் வெளியான உண்மை
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் வெளியான உண்மை
கடந்த வருடங்களில் உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலகெங்கிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பெரும்பாலானவர்களுக்கு செலுத்தப்பட்ட பின் வைரஸின் பாதிப்பு குறைந்ததாக தெரியவந்தது.
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பைஸர், மோடெர்னா, மற்றும் அஸ்ட்ராஸினெகா போன்ற நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதயம், மூளை மற்றும் குருதி கோளாறுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கையின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஆய்வின் கண்டுபிடிப்புகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இலங்கை விழிப்புடன் இருப்பது நல்லது எனவும் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப்பெரிய ஆய்வாக இது கருதப்படுகிறது.
மேலும், ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய எட்டு நாடுகளில் கிட்டத்தட்ட 100 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டவர்களை மையப்படுத்தி குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியால் ஏற்படவிருக்கும் ஆபத்து
நரம்பியல், இரத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம், வைரஸ்-வெக்டார் மற்றும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளுக்கு பின்னர் ஏற்பட்ட அபாயங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை மக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |