மனைவியாக மாறிய ஆண்.. அந்தரத்தில் அதிர்ந்த விமானக்குழுவினர்: நடுவானில் பரபரப்பு
இந்தோனேசியாவில் மனைவியின் பாஸ்போர்ட்டில் புர்கா அணிந்த படி விமானத்தில் பயணித்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நடுவானில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
விமானங்களில் பயணிக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட DW என்ற நபர், புர்கா அணிந்த படி தனது மனைவியின் பாஸ்போர்ட் மற்றும் அவரது கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை காட்டி விமாத்தில் ஏறியுள்ளார்.
விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது DW, புர்காவை கழற்றி ஆண் உடைக்கு மாறியுள்ளார்.
பெண்ணாக விமானத்தில் ஏறிய பயணி தற்போது ஆணாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போன விமானக்குழுவினர், உடனடியாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கியவுடன் DW-வை கைது செய்த பொலிசார், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது, இதனையடுத்து தற்போது அவர் தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முடிந்தவுடன் விரைவில் DW மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.