இந்த நாட்டிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது: தொடர்ந்து அதிகரிக்கும் நம்பிக்கை
தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 38 சதவிகிதம் குறைந்துள்ளதையடுத்து, Omicron வகை கொரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸைவிட தீவிரம் குறைவானதே என்ற நம்பிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
டிசம்பர் 17 வரையிலான ஏழு நாட்களில், தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை உச்சம் தொட்டு, சராசரியாக நாளொன்றிற்கு 23,437பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
ஆனால், திங்கட்கிழமை (26.12.2021), அந்த எண்ணிக்கை 38 சதவிகிதம் குறைந்து 14,390 ஆகியுள்ளது. ஆண்டின் துவக்கத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை 578 ஆக இருந்த நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட 60 ஆக குறைந்துள்ளது.
ஆக, தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதுடன், Omicron அலை, தானாக வலுவிழந்து வருவதுபோல் தோன்றுகிறது.
கடந்த வார நிலவரப்படி, தென்னாப்பிரிக்காவில் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 10இல் ஒன்பது பேர் தடுப்பூசி பெறாதவர்களே.
இந்நிலையில், Omicron வகை கொரோனாவால் உயிரிழந்த 309பேரில் 40 பேர்மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றவர்கள் என்பதால், தடுப்பூசி கொரோனாவிலிருந்து பாதுகாப்பளிப்பதும் உறுதியாகியுள்ளது.