இறப்பு எண்ணிக்கை... தீவிரமடையும் பாதிப்பு: மருத்துவர்களே இறுதியில் ஒப்புக்கொள்ளும் பரிதாபம்
சீனாவில் கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை அதிகாரிகளே தற்போது ஒப்புக்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
70% பேர்களுக்கும் பாதிப்பு
ஷாங்காய் பகுதியில் மட்டும் மொத்த மக்கள் தொகையான 25 மில்லியனில் 70% பேர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சீன பயணிகள் தொடர்பில் மேற்கத்திய நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்விளைவுகள் கட்டாயம் எதிர்பாருங்கள் எனவும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளில் தவறு நடந்துள்ளதாக முதன்முறையாக நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 7ம் திகதி நாடு முழுவதும் அமுலில் இருந்த கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் மொத்தமும் தளர்த்தப்பட்டது.
@getty
நாடு திரும்பும் மக்கள் இனி தனிமைப்படுத்தவும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. மட்டுமின்றி, இனி கொரோனா தொற்றுடன் வாழப்பழக வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமுலுக்கு கொண்டுவந்தனர்.
தீவிரமடைந்து வருவதாக தகவல்
ஆனால் அதன் பின்னர்தான் பாதிப்பு எண்ணிக்கை விண்ணைத் தொட்டது. பெய்ஜிங்கில் பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 248 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பே கூறுகின்றனர்.
தற்போது ஷாங்காய் பகுதியில் 70% மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 20 முதல் 30% அதிகம் என்றே கூறுகின்றனர்.
@reuters
ஷாங்காய் அருகாமையில் அமைந்துள்ள Zhejiang பிராந்தியத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடைந்துள்ளதாகவும், சமீப நாட்களில் 1 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்,.