கொரானாவிற்கு பயந்து 3 வருடமாக வீட்டிலே அடைந்து கிடக்கும் தாயும் மகனும் ! கதவை உடைத்த காவல்துறை
கொரோனா தொற்றுக்குப் பயந்து 3 வருடங்களாகத் தனது 10 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் தாய் மற்றும் மகனைக் காவல் துறை மீட்டுள்ளது.
கொரோனாவுக்கு பயந்த தாய்
கொரோனா தொற்றுக்குப் பயந்து ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் தனது 10 வயது மகனுடன் 3 ஆண்டுகள் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு வெளி வராமல் இருந்த தாயை காவல்துறையினர் தற்போது மீட்டிருக்கின்றனர். இதனையடுத்து தாயும் மகனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பீதி
உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்குப் பலரும் உயிரிழந்தனர். இதனால் அச்சமயத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பீதி குறைந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
இந்த நிலையில் சுஜன் என்பவரின் மனைவி கொரோனாவிற்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கிறார். வேலைக்குச் சென்ற கணவனையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் தன் மகனோடு வீட்டிலேயே வாழ்ந்துள்ளார்.
தற்கொலை முயற்சி
சுஜன் அவர்களது வீட்டிக்கு தேவையான எல்லா வசதியும் செய்து வேறு ஒரு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார்.
@Yogendra Kumar/HT PHOTO
ஹரியானா காவல் துறையிடம் புகார் அளிக்க முதலில் அதனை நம்பாத காவல் துறையினர் பின்பு சந்தேகப்பட்டு கஜன் வீட்டுக்குப் போயிருக்கின்றனர். பின்பு வீட்டின் கதவை உடைத்து கஜனின் மனைவி மற்றும் மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.