மீண்டும் மொத்தமாக மூடப்படும் வூஹான் நகரம்... கடுமையான கட்டுப்பாடுகள்: மக்கள் வெளியேறத் தடை
ஒரு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 800,000 மக்களை வீட்டை விட்டு வெளியேற தடை
இதே நிலையில் தான் இனி வாழ்க்கை முன்னெடுக்க வேண்டும் எனில் அதற்கும் நாங்கள் தயார்
உலகின் முதல் கொரோனா நோயாளியை அடையாளம் கண்ட சீனாவின் வூஹான் நகரம் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ல் முதன் முறையாக கொரோனா நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த வாரத்தில் மட்டும் நாளுக்கு 20 முதல் 25 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
இதனால் எதிர்வரும் ஞாயிறு வரையில் ஒரு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 800,000 மக்களை வீட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளனர். குறித்த திடீர் கட்டுப்பாடுகள் அங்குள்ள மக்க:ளை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
இதே நிலையில் தான் இனி வாழ்க்கை முன்னெடுக்க வேண்டும் எனில் அதற்கும் நாங்கள் தயார் என தங்கள் இயலாமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, வூஹான் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் பன்றி மாமிசம் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.
@reuters
தற்போது கொரோனா பரவலுக்கு காரணம் உள்ளூர் பன்றி மாமிச கடைகள் தான் என நிர்வாகிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வூஹான் முதல் Xining வரையான நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியான தகவலில் சீனா முழுவதும் 1,000 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பொறுத்தமட்டில், சீனாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக குறைவு என்றாலும், கடுமையன கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
@PA
பொருளாதார உற்பத்தியில் சீனாவின் நான்காவது பெரிய நகரமான குவாங்சோவின் பல பகுதிகளில் வீயழக்கிழமை முதல் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் நான்காவது வாரமாக குவாங்சோ நகரில் தொடர்கிறது என்றே கூறப்படுகிறது.
மேலும், அக்டோபர் 24ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், சீனாவின் 28 நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றே தெரியவந்துள்ளது.