ஐரோப்பிய ஒன்றியம் முழுக்க இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்!
ஐரோப்பாவின் European Medicines Agency டிசம்பர் 21 அன்று ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது, மேலும் 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
தடுப்பூசிகளை செலுத்துவதற்கான முழு முயற்சியில் உதவுவதற்காக சில நாடுகள் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மேலும் இதில் உதவுவதற்கு பிற தொழில்களைச் சேர்ந்த பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் ஐரோப்பிய கண்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என அரசாங்கங்கள் ஊக்குவித்து வருகின்றன. மேலும் "தடுப்பூசி என்பது தொற்றுநோயிலிருந்து வெளியேற ஒரு நீடித்த வழி" என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.
ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் சனிக்கிழமை தெரிவித்தார். "இந்த தடுப்பூசி இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்க்கமான விசையாகும் ... நம் வாழ்க்கையை திரும்பப் பெறுவதற்கான திறவுகோல்."
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறைந்தது 16 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளையும், 336,000-க்கும் அதிகமான இறப்புகளையும் பதிவு செய்துள்ளன, இருப்பினும் தொற்றுநோய்களின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சோதனையின் காரணமாக உண்மையான எண்கள் அதிகமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் 27 நாடுகளின் தொகுதி ஞாயிற்றுக்கிழமை ஒரு ஒருங்கிணைந்த பட்டியலைத் திட்டமிட்டிருந்தது, ஆனால் ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் ஒரு நாளுக்கு காத்திருக்க முடியாது என சனிக்கிழமையே மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது.
ஹங்கேரியில், புடாபெஸ்ட் நகரில் உள்ள மருத்துவமனைகளில் ஃப்ரண்ட்லைன் சுகாதார தொழிலாளர்களுக்கு முதல் தடுப்பூசி டோஸ்களை போடத் தொடங்கியது.
ஜேர்மானியில், வடகிழக்கு ஜேர்மன் பிராந்தியமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் தடுப்பூசிகளை போடத் தொடங்கியது. அங்கு 101 வயதான எடித் குய்சல்லா என்பவருக்கு முதல் ஊசி செலுத்தப்பட்டது.
ஸ்லோவாக்கியாவில் ஒரு தொற்று நோய் நிபுணர் விளாடிமிர் க்ரிக்மேரி முதன்முதலில் தடுப்பூசி பெற்ற நபர் ஆவார். 60 வயதான அவருக்கு நைட்ரா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களுடன் தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று பிரான்ஸ், இத்தாலி, போலந்து, பல்கேரியா, குரோசியா எனப் பல ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி திட்டங்களை தொடங்கின.
