கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள் எவை?
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன.
கோவிஷீல்டு தடுப்பூசி ஐரோப்பிய மருந்துகள் முகமையின் (EMA) ஒப்புதலுக்காகவும், கோவாக்சின் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலுக்காகவும் காத்திருக்கின்றன.
இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகள் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியா மீதான பயணத் தடையை வாபஸ் பெறும்போது, இந்த இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றை போடுகிற இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளமாட்டார்கள்.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியல்:
ஆஸ்திரியா
எஸ்டோனியா
ஜேர்மனி கிரீஸ்
அயர்லாந்து
நெதர்லாந்து
ஸ்லோவேனியா
ஸ்பெயின்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நாடுகளைத் தவிர, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை கோவிஷீல்ட்டை பயண நோக்கங்களுக்காக செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொண்டன.
மேலும், பின்லாந்து மற்றும் லாட்வியாவும் (Latvia) கோவிஷீல்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை எஸ்டோனியா (Estonia) அங்கீம்காரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.